அதி உன்னத மன எழுச்சியை அளிக்கும் ஒரு இசை கோர்வை
Tuesday, April 28, 2009
Requiem for a Dream - Clint Mansell
Posted by
Hari
at
4:15 AM
0
comments
Labels: Clint Mansell, Requiem for a Dream Links to this post
Monday, April 27, 2009
நின்னையே ரதியென்று.....
நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி - கண்ணம்மா
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்
(நின்னையே)
பொன்னையே நிகர்த்த மேனி
மின்னையே நிகர்த்த சாயல்
பின்னையே நித்ய கன்னியே
கண்ணம்மா
மாரனம்புகள் என் மீது வாரி வாரி வீசநீ
கண் பாராயோ வந்து சேராயோ
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
யாவுமே சுகமுனிக்கோர் ஈசனாம் எனக்குன் தோற்றம்
மேவுமே இங்கு யாவுமே
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
(நின்னையே)
வரிகள்: சுப்ரமணிய பாரதியார்
Posted by
Hari
at
11:08 PM
0
comments
Labels: மகாகவி பாரதியார் Links to this post
Wednesday, April 08, 2009
சிறுபான்மை இந்துக்கள் - 2
கர்நாடக மாநிலம் Hubli-யில் நடைபெறும் கிறித்துவ ஆக்கரமிப்பு குறித்த ஒளிப்படம்
Posted by
Hari
at
10:01 PM
0
comments
Labels: Christian agression, Hindus, MInority Hindus, கிறித்துவ ஆக்கரமிப்பு Links to this post
Thursday, March 26, 2009
சிறுபான்மை இந்துக்கள்
Posted by
Hari
at
1:01 AM
0
comments
Labels: Christian agression, Chritianity, Hinduism, Hindus, Temple Links to this post
Sunday, January 04, 2009
"களை எடு" - வேரை தேடி
நம்மாழ்வார். தமிழ் மக்களுக்கு வெகுவாக அறிமுகமானவர். இயற்கை சார் வேளாண்மை குறித்து பெருமளவு பேசியும், செயலிலும் ஈடுபடுபவர்.
கிழக்கு பதிப்பகத்தின் இந்த புத்தகம் அவரது கட்டுரைகளின் தொகுப்பு. இந்திய விவசாயம் அதன் கலாச்சாரம், சூழலை விட்டு பெருமளவு நகர்ந்து வந்துவிட்டதை பெருமளவு ஆதங்கத்துடன் பதிவு செய்துள்ளார். இந்திய விளைநிலங்கள் மேற்குலகின் தேவை சார்ந்து செயல்படும் சூழலில் நம் பாரம்பரியம் சார்ந்த விதைகளையும், விளைச்சல் முறைகளையும் இழந்துவிட்டு நிற்கும் அவலநிலையை பதிவு செய்துள்ள கட்டுரைகள் அடங்கிய நூல்.
இயற்கை சார்ந்த விவசாயம் என்பது கோமியம் தெளிக்கும் செயல் மட்டும் இல்லை. இயற்கையை எந்த சூழலிலும் மாசுபடுத்தாமல், பிற உயிர்களும் வாழ வழிவகை செய்யும் முறைகளையும், நுட்பங்களையும் உள்ளடக்கிய ஒரு செயல் என்று அறியமுடிகிறது.
பரந்துபட்ட நிலமான இந்தியாவில் நிலவும் மாறுபட்ட தட்பவெட்ப்ப நிலைகளுக்கு ஏற்ப, ஒவ்வொரு நிலத்திற்கும் ஏற்ற பயிர் வகையை நாம் விளைவிக்க வேண்டும் என்று கூறுகிறார். ஒரே விதமான முறைகளை இந்திய நிலபரப்பில் உபயோகப்படுத்த சரியல்ல என்றும், அதன் காரணத்தையும் மிக தெளிவாகவே விளக்குகிறார். இயற்கை விவசாயத்தில் இயற்கையையும் ஒரு கூறாக உபயோகபடுத்தும் நுட்பம் குறித்தும் விவரிக்கிறார். அனைத்து புழுக்களும் பயிரை அளிக்கும் தன்மை கொண்டவையல்ல, மாறாக, இரண்டு வகை புழுக்கள் மட்டுமே அவ்வாறனவை என்றும், இன்ன பிற புழுக்கள் பயிரின் விளைச்சலுக்கு எந்த வகையில் உதவுகின்றன என்றும் பேசுகிறார். நவீன விவசாய முறைகளால் விளைச்சல் அதிகமாகிய போதும், குறைந்து வரும் நிலத்தடி நீர் குறித்து கவலை கொள்ளாதது குறித்தும் கேள்வி எழுப்புகிறார். இந்த இடத்தில் விவசாய புரட்சியின் காலகட்டத்தில் நாம் செய்த தவறுகளையும் உணரமுடிகிறது.
நவீன உரம் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் மூலமாக பெறப்படும் விதைகளை உள்ளடக்கிய விவசாய முறை இயற்கையை வளத்தை உறிஞ்சிவதோடு மட்டுமல்லாமல், பிற்காலத்தில் இந்த நிலங்களால் மனித சமூகம் எந்த ஒரு பயனும் அடையமுடியாத நிலைக்கு, ஒரு மலடு தட்டிய நிலைக்கு, இட்டு செல்வதை பல்வேறு தரவுகளுடன் நிறுவுகிறார். ஒவ்வொரு ஆண்டும் 80,000 முதல் ஒரு லட்சம் டன் வரையிலான உரங்கள் நம் நிலங்களில் தூவபடுவதாகவும், அதனால் நிலத்தின் செழிப்பும், நிலம் சார்ந்து வாழும் பல உயிர்கள்(வண்டு, புழு போன்றவை) ஆகியவற்றின் அழிவை குறித்து அவர் அடுக்காக தரவுகளை நம்முன் நிறுவுகிறார்.
நவீன விவசாயம் அளித்த பல்வேறு கெடுதல்களுக்கு இந்திய சமூகம், அதன் பாரம்பரியம், குறித்து ஏதும் அறியாத நம் விஞ்ஞானிகளின் பங்கையும் குறித்து பேசுகிறார். கண்மூடித்தனமாக மேற்குலகின் முறைகளை பின்பற்றியதன் மூலம், பல வகையான விதைகளையும், பல பயிர் ரகங்களையும் இழந்து நிற்கும் இந்தியாவின் தற்கால சமூகத்தை நம்மால் தரிசிக்க முடிகிறது. காலனிய சூழல் அளித்த கல்விமுறையை இதற்கான அடிப்படை பிரச்சனையாக அடிக்கோடிடுகிறார்.
இயற்கை நமக்கு அளித்த வளங்களை அழித்ததோடு மட்டுமல்லாமல், மிச்ச இருக்கும் வளங்களையும் நாம் பராமரிக்கும் முறையிலும் இருக்கும் குறைபாடுகள் குறித்தும் பேசுகிறார். நீர் நிலைகளை தக்க காலத்தில் தூர்வாராமல் விடுவதினால் தான் நாம் அடையும் நஷ்டங்கள் குறித்தும் பேசுகிறார்.
இயற்கை சார்ந்த விவசாய முறை குறித்து பேசப்படும் போதெல்லாம் முதலில் எழும் கேள்வி, இன்றைய இந்திய மக்கட் தொகைக்கான உற்பத்தியை அதனால் அளிக்க முடியுமா என்பது தான். சில கட்டுரைகளில் அதற்கான விடையை நம்மால் அறியமுடிகிறது. இயற்கை முறையை பின்பற்ற ஆரம்பிக்கும் பட்சத்தில் பத்து வருடத்தில் இப்போது நவீன விவசாயம் அளிக்கும் அதே அளவிலான கொள்முதலை பெறமுடியும் என்று கூறுகிறார். க்யூபாவின் இயற்கை விவசாயம் அளித்திருக்கும் பலன்கள் குறித்தும், உணவு உற்பத்தியில் அந்த நாடு அடைந்துள்ள தன்னிறைவு குறித்தும் குறிப்பிடுகிறார்.
பெருமளவு சர்ச்சையை கிளப்பியிருக்கும் பி.டி விதை குறித்து இவரது விமர்சனம் ஒற்றைபடையாக அமைகிறதோ என்று எண்ண தோன்றுகிறது. பருத்தி, வெண்டை ஆகியவற்றின் பி.டி. விதைகள் அந்த காய்களை மனிதர்கள் உபயோகபடுத்த முடியாத வகையில் அதை விஷமாக மாற்றிவிடுகின்றன என்றும், ஆகையால் அவற்றை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்றும் கூறுகிறார். பி.டி. விதைகள் யாவும் எதிர்பார்த்த வகையில் விளைச்சலை அளிக்காதது குறித்தும் பேசுகிறார். இவையெல்லாம் உண்மையே. ஆனால் மரபணு மாற்றபட்ட விதைகளை மொத்தமாக அழிக்க வேண்டும் என்று இவர் கூறுவது எந்த அளவிற்க்கு ஏற்கதக்கது? எம்.எஸ்.சுவாமிநாதனின் தலைமையில் செயல்படும் குழு ஒன்று உப்பு தண்ணீரிலும் விளைச்சலை தரக்கூடிய நெல் விதைகளை உருவாக்குவதில் வெற்றி கண்டிருக்கின்றனர். Mangroves எனப்படும் மரத்தில் உள்ள கடல்நீரை சகித்து வாழும் சக்தியை அளிக்கும் ஒரு ஜீனை பிரித்தெடுத்து அதை அரிசி உள்ளிட்ட சில பயிர்களின் விதைகளில் செலுத்தபட்டு அது இன்று பரிசோதனை கட்டத்தில் உள்ளது. இதன் பயனாக கடல் சார்ந்த வாழ்க்கை நடத்தும் மக்கள் மீன் தொழிலை மட்டும் நம்பி வாழாமல், விவாசயத்திலும் ஈடுபடும் வாய்ப்பும், அதனால் அவர்களின் பொருளாதாரம் உயரும் வாய்ப்பும் பிரகாசமாகியுள்ளன. ஆகவே மரபணு நுட்பத்தின் விளைவில் உருவாக்கபடும் விதைகளை முற்றிலும் ஓரங்கட்டபடாமல், மேற்குறிப்பிட்ட வகையிலான முயற்சிகளை மேற்கொள்வது பல பயன்களை அளிக்க வல்லது.
இந்திய விவசாயத்தின் தற்போதைய அவலநிலையையும், அதனூடாக நமது சமூக, தனிமனித வீழ்ச்சி குறித்தும் பேசும் எழுத்துக்கள் இவை. இருளின் பாதையில் நாம் நடைபோட துவங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டதை வருத்தத்துடன் பேசுகிறார் நூலாசிரியர். பாரம்பரிய மீட்பு என்பது நம் வரலாற்றில் இருந்து, நம் முன்னோர்கள் தங்கள் அனுபவங்கள் மூலம் விட்டுசென்றுள்ள மரபு சார்ந்த அறிவை நாம் கற்கும் முயற்சி என்ற எண்ணத்துடன் நம் பாரம்பரிய விவசாய முறைகளை நாம் மீள்பார்வை கொள்ளவேண்டும். இந்திய கலாச்சாரம், அதன் பாரம்பரியம் குறித்து பேசினால் அதை பிற்போக்கு என்று எண்ணும் சிலருக்கு இந்த புத்தகம் சில கதவுகளை திறக்கலாம்.
விவசாயத்தின் எந்த அரிச்சுவடியும் அறியாத வாசகரையும் சென்றடைவது இந்த நூலின் பலம் என்று கருதுகிறேன்.
Posted by
Hari
at
7:07 AM
1 comments
Labels: இயற்கை விவசாயம், களை எடு, கிழக்கு பதிப்பகம், நம்மாழ்வார் Links to this post
Wednesday, December 31, 2008
இளையராஜாவின் oratario - திருவாசகத்திற்க்கு முந்தைய அவரது பணி
"தென்றலை கண்டு கொள்ள"(படம்:நிலவே முகம் காட்டு) என்ற பாடலை சில நாட்களாக தொடர்ந்து கேட்டு வருகிறேன். ஒரே பாடலில் வேறுபட்ட ரிதம் குறித்து சேது
முதல் சரணம் முடிந்தவுடன், ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தையும், அதன் தமிழ் மொழிபெயர்ப்பையும் கேட்க முடிகிறது. திருவாசகம் oratario-விற்க்கு இந்த பாடலில் முதல் அடி எடுத்து வைத்திருப்பாரோ என்று எண்ண தோன்றுகிறது. oratario-வில் இருந்து மீண்டும் பழைய ரிதம் நோக்கி வந்துவிடுகிறார், எந்த உறுத்தலும் இல்லாமல்.
இசை மற்றும் சமூக தளங்களில் அவர் மீதான (அரசியல் சாயம் கொண்ட)விமர்சனங்களையும் தாண்டி, இன்னும் 50 வருடம் கழித்து இளையாராஜா குறித்த ஆராய்ச்சி பெருமளவு நடைபெறும் என்று எண்ணுகிறேன்.
கீழே இசை(யராஜா) குறித்த அவரது இரண்டு கட்டுரைகள் :
இசையில் தொடங்குதம்மா
சொர்க்கமே என்றாலும்…
Posted by
Hari
at
2:06 AM
0
comments
Labels: oratario, இளையராஜா, சேதுபதி அருணாச்சலம், திருவாசகம் Links to this post
Tuesday, December 30, 2008
Lucha De Gigantes
Antonio Vega-வின் பாடல். முதல் முறை கேட்டவுடனேயே மூளையில் தொற்றிகொண்டது. முதலில் கேட்டது Amores Perros படத்தில். ஸ்பானிய மொழி பாடல். ஒருவன்(ள்) தன் பயத்தை விட்டொழித்து, சுதந்திரமாக, தன் வாழ்வில் இனி வரப்போகும் பொழுதுகளை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளபோகும் அறிவிப்பே இந்த பாடல்.
இவரது Nacha Pop என்ற குழு பிரபலமானது என்று நண்பர்கள் கூறுகிறார்கள். இந்த குழுவின் பாடல்களை கேட்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.
மற்றுமொரு, Mexican பாடல். Desperado எனும் படத்தில் வரும் பாடல்.
இரண்டு பாடல்களிலும் கிதாரின் ஆதிக்கத்தை கவனியுங்கள். அமைதியான அட்டகாசம். இரு மொழியின் இசையை குறித்து அறிய வேண்டும்.
Posted by
Hari
at
12:58 AM
0
comments
Labels: Amores Perros, Antonio Vega, Desperado, Nacha Pop Links to this post



